Sunday, March 19, 2017

"குளோபல் தமிழ் செய்திகள்" இணையத்தின் பிரதேசவாத முகம்!! - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்

1 கருத்துக்கள்

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் "குளோபல் தமிழ் செய்திகள்" தற்போது முன்னிலை வகிக்கிறது. 

கிளிநொச்சி பாடசாலைகள் என்றால் பெயரைகுறிப்பிட்டு சொல்வது யாழ்ப்பாணப் பாடசாலைகள் என்றால் "யாழில் பிரபலமான பாடசாலை ஒன்று" என்று மறைப்பது என குளோபல் தமிழ் இணையம் தனது சராசரி யாழ்ப்பாண மையவாதக் குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. 

இப்படிப்பட்ட இணையங்களை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் புறக்கணிக்கவேண்டிய காலம் உருவாகியுள்ளது. 

யாழ்ப்பாண பாடசாலைகள் பெரும் பண பலத்துடனும் அரசியல் செல்வாக்குடனும் காணப்படுவதால் நேரடியாக மோத அல்லது செய்தி வெளியிட திராணியற்ற இணையம், போரால் சிதைவுற்று மெல்ல மெல்ல எழும்பும் கிளிநொச்சி பாடசாலைகள் மீது தனது ஆண்மையை காட்டி சந்தோசப்பட்டிருக்கிறது. 

"குளோபல் தமிழ்ச் செய்திகள்" இணையமானது மூத்த ஊடகவியலாளர் குருபரன் அவர்களால் நடாத்தப்படுவதனால் அந்த இணையத்தின் மீது எப்போதும் பெரும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தவன் நான். 

ஊடகவியலை முறையாக கற்றவர் என்பதற்கப்பால் மிகவும் அனுபவமும் ஊடக நேர்மையும் உள்ள ஒருவரால் குளோபல் தமிழ் செய்திகள் இணையமானது நடபத்தப்படுவதால் அதன் மீதான வாசிப்பின் பார்வை ஒருபோதும் குறைந்ததில்லை. ஆனால் அண்மைக்காலமாக சமூகம் மீது முதிர்ச்சியற்ற பார்வைகளை வைத்திருக்கும் வெறுமனே சம்பளத்திற்கு செய்திகள் எழுதுபவர்களை வைத்து இணையத்தை குருபரன் அவர்கள் இணையத்தை நடாத்துகிறாரா என்று கேள்வியெழுப்பக் கூடிய அளவிற்கு ஊடக நெறிமுறைகளை இம்மியளவும் மதிக்காது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. 

குறிப்பாக தமிழ் கல்விச் சமூகத்தின் மீது வசைபாடல்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன. அதில் கூட பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட அணுகுமுறைகளை செய்திகளை வழங்குகிறது "குளோபல் தமிழ்ச் செய்திகள்" இணையம்.  

கிளிநொச்சி மத்தியகல்லூரி தனது ஆட்சேர்ப்பு நெறிமுறைகளில் இறுக்கமான முடிவுகளை எடுத்திருந்தபோது அதனால் ஒரு மாணவி கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை இழந்திருந்தார். அந்த மாணவிக்கு வாய்ப்பு வழங்குமாறு இன்னொரு பாடசாலைக்கு கல்வித் திணைக்களம் உத்தரவிட்டும் அந்தப்பாடசாலை உத்தரவை பின்பற்றியிருக்கவில்லை. ஆனால் கிளிநொச்சி மத்தியகல்லூரி அந்த மாணவியின் கல்வி வாழ்க்கையை சிதைக்க முனைந்தது போல கதை எழுதி பாடசாலைப் பெயருடன் வெளியிட்டது குளோபல் தமிழ் செய்திகள் இணையம். 

போர்காலத்தில் கிளிநொச்சி போரால் சிதைவுற்றிருந்த காலத்தில் மாணவர்களின் கல்விக்காக எவ்வளவோ தியாகத்தைத் செய்த பாடசாலையை அந்தப் பாடசாலையை வழிநடத்தும் ஆசிரியர்களை தனது ஊடக விளம்பரத்திற்காக நாசம் செய்தது குளோபல் தமிழ்ச் செய்திகள். 
பாடசாலையின் பெயர் தாய் மற்றும் சம்மந்தப்பட்ட பிள்ளையின் புகைப்படத்தையும் வெளியிட்டு தனது கேலமான முகத்தை குளோபல் தமிழ் செய்திகள் இணையம் காட்டிய சந்தர்ப்பம்

"கிரிமினல் சட்ட" வகையறாக்களில் உள்ளடங்கப்படாத அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளில் பாடசாலை பெயரை போடுவது, சம்மந்தப்பட்ட மாணவி மற்றும் அவரின் தயாரின் புகைப்படத்தை போடுவது ஊடக நெறிமுறைக்கு முரணானது என்றும், அது அங்கு கல்வி கற்கும் ஏனைய மாணவர்களின் (சிறுவர்களின்) உளவியல் பிரச்சினைக்கு வித்திடும் என்றும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் தனது வறட்டுக் கௌரவத்தை விடத்தயாரில்லாமல் இருந்த குளோபல் தமிழ் செய்திகள் இணையம் கிளிநொச்சி மாவட்ட முன்னணிப் பாடசாலையின் வரலாற்றில் கரும்புள்ளியொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக வேலைசெய்தது.


இணையத்தின் நோக்கமும் அதில் பணியாற்றுபவர்களின் தரமும் தெரிந்தவுடன் அது குறித்து பேசிப் பலனில்லை என்று கல்விச் சமூகத்தினர் ஒதுங்கிக் கொண்டனர். 
மோசமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கும் யாழ்ப்பாண பாடசாலையின் பெயரை மறைத்து "குளோபல் தமிழ் செய்திகள் இணையம்" தனது வாலை சுருட்டிக் கொண்ட சந்தர்ப்பம்.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றைப் பற்றியும் செய்தி வெளியிட்டிருக்கிறது குளோபல் தமிழ் செய்திகள் இணையம். அந்தப் பாடசாலைச் சமூகமானது "கிரிமினல் சட்டத்திற்குள்" கையாளப்படவேண்டிய களவு போதைவஸ்துப் பாவனை, பாலியல் சேட்டைகள், குழுமோதல் உள்ளிட்ட பல மோசமான வேலைகள் செய்வதாக குற்றம்சாட்டியிருந்தாலும் பாடசாலையின் பெயரை போடத் தயங்குகிறது "குளோபல் தமிழ் செய்திகள்" இணையம். காரணம் அந்தப் பாடசாலை பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கது. குளோபல் தமிழ் இணையத்தையே இல்லாமல் செய்யக் கூடிய அளவிற்கு பலமான பின்னணியைக் கொண்டது. இதனால் தனது ஆண்மையை வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வாசித்திருக்கிறது இந்த இணைய தளம். 

இரண்டுமாத இடைவெளிக்குள் இரண்டு பாடசாலை விடையங்களை தனது சொந்த பிரதேச நலன் சார்ந்து கையாண்ட "குளோபல் தமிழ் செய்திகள்" என்ற இணையமானது மிக மோசமாக ஊடக நெறிமுறைகளை கையாழும் ஊடகமாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

கிளிநொச்சி பாடசாலை விடையத்தை கையாண்ட முறைகுறித்து குளோபல் தமிழ் செய்திகள் இணையமும் அதை நடாத்தும் குருபரனும் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்தக் கறை இனிமேல் ஒருபோதும் அழிக்க முடியாத கறையாக குளோபல் தமிழ் செய்திகள் மீது படிந்து கிடக்கும்.

"காசுக்கு கட்டுரை எழுதிறவன் பரபரப்புக்காக எதை வேண்டுமெண்டாலும் எழுதுவான் தம்பி" என்று மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சொன்னது இப்பொழுது ஞாபகம் வருகிறது. 


மா.குருபரன்

19-03-2017

1 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க