Monday, February 6, 2017

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புத்த கோயில்!!

0 கருத்துக்கள்

வடமாகாணம் என்பது யாழ்ப்பாணம் மட்டும் தான் என்ற தோற்றப்பாட்டை அரசும் எதிர்க்கட்சியும் இதர தமிழ் கட்சிகளும் இணைந்து உருவாக்குகின்றன.

மாங்குளத்தில் இருக்க வேண்டிய வடமாகாண சபை கட்டடம் யாழ்ப்பாணத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

வவுனியாவில் இருக்க வேண்டிய பொருளாதார மையம் ஓமந்தைக்கு கொண்டுவரப்பட்டது.

முல்லைத்தீவு கிளிநொச்சி பகுதிகளில் இருக்க வேண்டிய கைத்தொழிற் பேட்டைகள் யாழ்ப்பாணத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

எல்லாவற்றையும் குறுக்கி குறுக்கி கொண்டு காலடிக்குள் கொண்டுவந்தால் எதிரியும் முன்னேறி இடங்களை தம்வசப்படுத்துவது இயல்புதானே.

நிலங்களை பாதுகாக்க வேண்டுமெனின் பாதுகாப்பரணை எல்லைகளில் போட வேண்டும்.

கிளிநொச்சியில், வவுனியாவில், மன்னாரில், முல்லைத்தீவில் மாகாண சபையின் நிர்வாக பலம் பூச்சியம். மக்களையும் மண்ணையும் பாதுகாக்க கூடிய முடிவுகள் எடுக்காமல் உப்புச் சப்பற்ற தீர்மானங்களை நிறைவேற்றும் அரசியல்வாதிகளைக் கொண்டு வடமாகாண சபை கட்டியமைக்கப்பட்டிருப்பது இருப்பது மிகப் பெரிய சாபக்கேடு. எதைப்பற்றியும் கவனிப்பில்லாமல் இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தது அதைவிட சாபக்கேடு.

தலைவன் என்பவன் ஆணித்தரமான முடிவுகள் எடுக்க கூடியவனாகவும் அதை களத்தின் நின்று நிறைவேற்றக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். மாறாக சமய பிரசங்கங்கள் செய்பவனைப் போல இருக்கக் கூடாது.

வடமாகாண தமிழர் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் வடமாகாண நிர்வாக அலகுகள் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளில்  இருக்க வேண்டும்.

மா.குருபரன்
06-02-2017

0 கருத்துக்கள்:

Post a Comment

என்ன தோணுது... இங்க சொல்லுங்க